Ticker

6/recent/ticker-posts

மொசாட்டுக்கு தொடர்பிருக்குமா ?ஈரானின் தலைவரின் இறப்பிற்கு ?


ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ரைசி குழுவினரின் ஹெலிக்கொப்டர் விபத்தில் சிக்கியதனால் அதில் பயணித்த எவரும் உயிர் தப்பியிருக்க வாய்ப்பில்லை என்று செய்திகள் கூறுகின்றன. 

சீரற்ற காலநிலை காரணமாக தொடர்புகள் துண்டிக்கப்பட்டதுடன் உண்மை நிலையை உடனடியாக கண்டறியப்படாத நிலையில் அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் முதன் முதலில் செய்திகள் வெளியிட்டதுடன் இந்த சம்பவத்துக்கும் தங்களுக்கும் தொடர்பில்லையென்று வழமைக்கு மாறாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இது இஸ்ரேலின் சதிமுயற்சியாக இருக்குமா என்ற வலுவான சந்தேகம் எழுகின்றது. 


ஏனெனில் மொசாட், CIA ஆகியன இதுவரையில் நூற்றுக்கு மேற்பட்ட அரசியல் மற்றும் இராணுவ தலைவர்களை ஆதாரங்கள் கண்டுபிடிக்க முடியாதவாறு கொலை செய்துள்ளது. 

இஸ்ரேலின் மிக நெருங்கிய நட்பு நாடுகளில் அசார்பைஜானும் ஒன்று. அத்துடன் ஈரானை கண்காணிப்பதற்கான மொசாட்டின் தளமாக கடந்தகாலங்களில் அசார்பைஜான் இருந்தது. 

2018 இல் ஈரானிய அணுத்திட்டம் தொடர்பான இரகசிய ஆவணங்கள் ஈரானிலிருந்து மொசாட்டினால் திருடப்பட்டு அது அசார்பைஜான் வழியாக அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரம்பின் கைகளுக்கு சென்றது. 

ஈரானின் அணுசக்தி திட்டத்துடன் தொடர்புடைய ஏராளமான விஞ்ஞானிகள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டனர். 

2020 இல் ஈரானிய அனுத்திட்டத்தினை வழிநடாத்திய பிரதம அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதே அவர்கள் தனது மனைவியுடன் காரில் பயணித்தபோது ஈரானில்வைத்து கொலை செய்யப்பட்டார். 

இவ்வாறு மர்மமானமுறையில் தங்களது நாட்டுக்குள் நடைபெற்று வருகின்ற கொலைகளையும், வன்முறை சம்பவங்களையும் ஆரம்பத்தில் கண்டுபிடிப்பதற்கு ஈரானிய புலனாய்வுத் துறையினறால் முடியவில்லை. 

ஈரானிய அணுசக்தி திட்டத்தினை அழிப்பதற்காக அசார்பைஜானில் மொசாட்டினர் இரகசியமாக செயற்படுவதனையும், இதற்காக அசார்பைஜானுக்கு இஸ்ரேல் பொருளாதார உதவிகளை வழங்குவதனையும் ஈரானிய புலனாய்வுத்துறையினர் தாமதித்தே கண்டுபிடித்தனர்.

ஈரான் அப்போது உடனடியாக களத்தில் இறங்கியது. அதாவது 2021 இறுதியில் அசார்பைஜானுடனான எல்லையில் ஈரான் தனது படைகளையும், கனரக ஆயுதங்களையும் குவித்து போருக்கு தயாரானது. அதன்பின்பு அசார்பைஜான் ஈரானின் காலில் விழுந்ததன் பயனாக ஈரானிய படைகள் எல்லையிலிருந்து பின்வாங்கியது. 

எனவேதான் இன்று ஈரானிய ஜனாதிபதி குழுவினருக்கு ஏற்பட்ட விபத்துடன் மொசாட்டை தொடர்புபடுத்தி சந்தேகப்படுவதில் தவறில்லை. 

முகம்மத் இக்பால் 
சாய்ந்தமருது

தினமும் செய்திகளுடன் இணைந்து கொள்வதற்கு👉

https://chat.whatsapp.com/FBuXbvldbbYLHxKDQaH49w

Post a Comment

0 Comments