Ticker

6/recent/ticker-posts

இனந்தெரியாத நபரின் கைங்கர்யம் - வீடு எரிந்து பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் சேதம்


ஹஸ்பர் ஏ.எச்_
திருகோணமலை மாவட்டத்தின் நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இல_38ல் உள்ள,பெரியகுளம் -விருகம்மான வீட்டுத் தொகுதியில் வீடொன்று தீப்பற்றியுள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.


குறித்த சம்பவம் நேற்று (09) அதிகாலை 12 .30 மணியளவில் இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது அன்றைய தினம் வீட்டை பூட்டி விட்டு திருகோணமலை கடற்படைக்கு முன்னால் தனது கடையில் தங்கியுள்ள்ள நிலையில் தூங்கிக் கொண்டிருக்கும் போது தனது வீடு தீப்பற்றி எரிவதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது. இந் நிலையில் இத் தீ சம்பவம் இடம் பெற்றுள்ளதை அறிந்து உடனடியாக பொலிஸ் அவசரப் பிரிவு இலக்கமான 119 க்கு அறிவித்துள்ள நிலையில் தீயனைப்பு பிரிவுக்கும் அறிவித்ததாக குறித்த வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார். இதில் பல பெறுமதியான வீட்டு உபகரணங்கள் எறிந்து நாசமாகியுள்ளதால் பல இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 
உயிர் சேதம் எதுவும் இடம் பெறவில்லை .


இனந்தெரியாத நபரால் தீயிட்டு சென்றதாக இச்சம்பவம் தொடர்பில் உரிமையாளர் தெரிவித்தார்


இச் சம்பவம் தொடர்பில் நிலாவெளி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் உரிமையாளர் மேலும் தெரிவித்தார்.


குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை நிலாவெளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்


Post a Comment

0 Comments