குருநாகல் மாவட்டம் மாலதெனிய பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நபர் ஒருவரால் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி குருநாகல் நல்ல பகுதியில் 42 வயதுடைய நபரொருவரால் ஆண் (80), அவரது மனைவி (77) மற்றும் அவர்களது மகன் (42) ஆகியோர் அவர்களது வீட்டில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குருநாகல் பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், 

குறிப்பிட்ட கைதான நபர் மனைவியின் சித்தப்பா, சித்தி மற்றும் அவர்களது மகனையே கொன்று பணம் மற்றும் தங்கத்தை கொள்ளையடித்துள்ளார்.

இன்று அதிகாலை 4 மணியளவில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


அதிகாலை வேளை ​​சைக்கிளில் சென்ற ஒருவரை போலீசார் சோதனையிட்டபோது, ​​அவரிடம் இருந்த 3 லட்சம் ரூபாய் பணம் மற்றும் தங்கப் பொருள்கள் இருப்பதைக் கண்டுபிடித்து, சந்தேக நபரை பிடித்து போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றதில், கொலை நடந்த விவரம் தெரியவந்தது.


இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் அவரது மனைவியின் சித்தப்பா சித்தி அவர்களது மகனை கொன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.