நாவலப்பிட்டியில் பாடசாலை மாணவர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டில் மாணவரொருவர் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

நாவலப்பிட்டியைச் சேர்ந்த 13 வயதுடைய பாடசாலை மாணவனே உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு, கிரிக்கெட் மட்டையால் தாக்கி கொலை செய்ததாக கூறப்படும் மாணவனை நாவலப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இரு மாணவர்களும் பாடசாலை நண்பர்கள் எனவும், இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி கிரிக்கெட் விளையாடச் சென்ற போது,

கிரிக்கெட் மட்டைக்காக ஏற்பட்ட முரண்பாட்டில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்தில் கடும் காயங்களுக்குள்ளான மாணவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,

நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.