கல்முனை நகரத்தை நான்காக அல்லது 48 ஆக என்றாலும் பிரிக்கலாம் ஆனால் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட 29 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு பிரதேச செயலகமாகத்தான் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் இருக்க வேண்டும் எனவும் ஒரு இஞ்சி அளவு நிலம் கூட விட்டுக் கொடுக்க முடியாது எனவும் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அக்கரைப்பற்றில் நேற்று மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.

மேலும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் அவர்கள் ஊடக சந்திப்பின் ஊடாக வெளிப்படுத்திய கருத்து தமிழ் மக்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும் கருத்தாக காணப்படுகிறது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாகவும் அதில் போராட்டத்தில் இருக்கும் மக்கள் சம்பந்தமாகவும் எதிர்வினையான கருத்தை வெளியிட்டு இருந்தார். அதில் 56வது நாளாக அம்பாறை மாவட்ட மக்கள் தொடர்ச்சியாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன. இந்த போராட்டத்திற்கு வலு சேர்க்கும் முகமாக அம்பாறை மாவட்டத்தில் ஏனைய பிரதேசங்களில் உள்ள மக்கள் ஒன்று சேர்ந்து செயல்படும் செயற்பாடும் காணப்படுகிறது. ஆனால் ஹரிஸ் அவர்கள் இந்த போராட்டத்தின் பின்னணியில் அரசியல்வாதிகள் இருப்பதாக கூறியிருந்தார். உண்மையாக அது பொய்யான கருத்து. இது அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து கொடுக்கப்படாத நிர்வாக அதிகாரங்களை தடுத்து நிறுத்துவதற்கு எதிராக மேற்கொள்ளப்படும் உணவுபூர்வமான போராட்டமாக தான் நாங்கள் பார்க்கின்றோம்.

56 நாட்களாக மழை வெயில் என்று பாராமல் போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில் ஹரிஷ் அவர்கள் கல்முனை நகரத்தை நான்காக பிரிப்பதாக கூறியிருக்கின்றார். அவர் 4 அல்லது 48 ஆக பிரிக்கலாம் அது அவருடைய சொந்த கருத்து. எத்தனையாக பிரித்தாலும் அது குறித்து கவலை இல்லை. ஆனால் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 29 கிராம சேவக பிரிவை உள்ளடக்கிய ஒரு பிரதேச செயலகமாக தான் கல்முனை பிரதேச செயலகம் இருக்க வேண்டும். ஒரு இஞ்சி அளவு நிலம் கூட விட்டுக் கொடுக்க முடியாது எனவும் அர் தெரிவித்தார்.

மேலும் கல்முனை நகரத்திற்கு அவர் பிதா எனக் கூறியிருந்தார், அவரது ஊரான கல்முனை குடிக்கு பிதாவாக இருக்கலாம் அல்லது சாய்ந்தமருதுக்கு, மருதமுனைக்கு பிதாவாக இருக்கலாம். ஆனால் கல்முனை நகரத்தை தமிழர்களின் தாயகமாகதான் நாங்கள் பார்க்கின்றோம். காரணம் கல்முனையில் 90% தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசம்.

தமிழர்களின் நிலத்தை துண்டாடுவதற்கான தமிழர்களை பிரித்தாழுகின்ற ஒரு செயற்பாடுதான் இந்த நான்காக பிரிக்கின்ற செயற்பாட்டை அவர் முன் வைத்திருக்கின்றார். இதற்கு முன்னர் இந்த செயற்பாடு பற்றி பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா அடிக்கடி கூறி வந்தார். இந்த துண்டாட்டங்களின் போது தமிழர்களின் தாயக பிரதேசங்களை துண்டாடி அதில் குளிர் காயும் செய்ற்பாட்டை முன்னெடுக்கவுள்ளார்கள்.

விசேடமாக இந்த பிரதேசத்தில் இருக்கின்ற தமிழ் மக்களுக்கான நியாயபூர்வமான உரிமைகளை குழப்புகின்ற சிதறடிக்கின்ற விதத்தில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட இருக்கின்றது. இதனை தமிழர்கள் ஏற்றுக் கொள்ள போவதில்லை.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அனைத்து வளங்களையும் உள்ளடக்கியதான ஒரு பிரதேச செயலகத்தை தான் தமிழர்கள் எதிர்பார்க்கிறார்களே தவிர 4 ஆக அல்லது 48 ஆக அல்லது 50ஆக பிரிப்பது பற்றி தமிழர்களுக்கு கவலை இல்லை கல்முனை தமிழர்கள் ஒரே ஒரு பிரதேச செயலகத்தை தான் எதிர்பார்க்கிறார்கள்.

News சிறகுகள்