ரெமல் சூறாவளி காரணமாக பங்களாதேஷ் மற்றும் இந்தியாவில் சுமார் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பங்களாதேஷும் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, பங்களாதேஷ் கடலோரப் பகுதிகளில் சுமார் 8 இலட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா மற்றும் பங்களாதேஷில் உள்ள ஒரு மில்லியன் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கிடையில், புயல் காரணமாக இந்தியாவின் மேற்கு பங்களாதேஷிலும் பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.