Ticker

6/recent/ticker-posts

VIDEO > இஸ்ரேல் மீதான தாக்குதல்களை வரவேற்று, ஈரான் தலைநகர் தெஹ்ரான் நகரில் மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்.


இஸ்ரேல் மீது ஈரான் ட்ரோன்கள்(ஆளில்லா விமானங்கள்) மூலம் தாக்குதல்களை நடத்தியதால் இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.

ஹமாஸ் படை மீது குறிவைத்து பாலஸ்தீன மக்கள் வாழும் காஸா மீது இஸ்ரேல் படையெடுத்துள்ளது. இந்த போரில் பல ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் சண்டையை தொடங்கியுள்ளது. சிரியாவிலுள்ள ஈரான் தூதரகம் தாக்கப்பட்டதை கண்டித்து இந்த தாக்குதல்கள் அரங்கேறியுள்ளன. ஈரான் தூதரகம் தாக்கப்பட்டதற்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை, நிராகரிக்கவும் இல்லை. இதனையடுத்து, ஈரானிலிருந்து இன்று அதிகாலை (ஏப். 14) நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் இஸ்ரேலை குறிவைத்து அனுப்பப்பட்டன.


இஸ்ரேல் மீதான தாக்குதல்களை வரவேற்கும் விதமாக ஈரான் தலைநகர் தெஹ்ரான் நகரில் மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். 


இந்த சண்டையில் அமெரிக்கா தலையிடக் கூடாதென ஈரான் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈரானின் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தப்படுமென இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இஸ்ரேல் அப்படியொரு தாக்குதலை மேற்கொண்டால் அடுத்த தாக்குதல் பயங்கரமாக இருக்குமென ஈரான் தற்போது அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments