Ticker

6/recent/ticker-posts

கல்வி அமைச்சின் இணையத்தளத்திற்குப் பதிலாக தற்காலிக இணையத்தளம்

இணையத்தள தாக்குதலுக்கு உள்ளான கல்வி அமைச்சின் இணையத்தளத்தை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை கணினி அவசர பதில் மன்றம் தெரிவித்துள்ளது.

அதன் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த, சைபர் பாதுகாப்பு குறைபாடு மூலம் கல்வி அமைச்சின் இணையதளத்தை தாக்குபவர் அணுகியதாக கூறினார்.

சைபர் தாக்குதலுக்கு உள்ளான இணையத்தளத்திற்கு பதிலாக அனைத்து தரவுகளையும் கொண்ட புதிய இணையத்தளம் ஒன்று நிறுவப்பட்டு வருவதாகவும் சைபர் தாக்குதலுக்கு உள்ளான இணையத்தளம் தொடர்பான விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை கணினி அவசரகால பதில் மன்றத்தின் பிரதம தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments