Ticker

6/recent/ticker-posts

ஞானசார தேரருக்கு ஆதரவாக பௌத்த மக்கள் நிபந்தனைகளின்றி நிற்க வேண்டும்..


ஞானசார தேரருக்கு ஆதரவாக பௌத்த மக்கள் நிபந்தனைகளின்றி நிற்க வேண்டும் என பலங்கொட கஸ்ஸப தேரர் குறிப்பிட்டார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர்,

இந்த உலகத்தில் குறை இல்லாத தவறு செய்யதாவர்கள் என எவரும் இலை.புத்த பெருமான் மாத்திரமே குறையில்லாத தவறு செய்யாத ஒருவர் . உலகத்தில் அனைவருக்கும் புத்த பெருமான் ஆக முடியாதுஆகவே ஞானசார தேரருக்கு ஆதரவாக பௌத்த மக்கள் நிபந்தனைகளின்றி நிற்க வேண்டும்.

கூரகலயில் வணக்க வழிபாடுகளுக்கு ஆதரவாக பேசியமைக்காக ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் அவருக்கு ஆதரவாக நாம் முன்னிடம் வேண்டும்.

அண்மையில் நடாஷா எதிரிசூர்ய ஜெரோம் பெர்னாண்டோ போன்றவர்கள் புத்த மதத்தை அவமதித்த அவர்கள் மன்னிப்பு கோரி நியாயத்தை நிலைநாட்டுவார்களாக இருந்தால் நாம் அவர்களுக்கு மன்னிப்பு வழங்க தயார் என்றே நாம் நீதிமன்றில் கூறினோம்.அஸாத் சாலி போன்று முஜிபுர் ரஹ்மான் போன்று நாம் கடுழிய தண்டனை வழங்குமாறு கோரவில்லை.

உங்களுடய தர்மம் இதுவா ? நீதி இதுவா ? என்று நான் மௌலவிகளிடம் கேட்கிறேன்.இந்த நேரத்தில் நீங்கள் முன்னால் வர வேண்டும் அல்லவா ?

இது சிங்கள தேசம் இந்த தேசத்தை கட்டியெழுப்பிவர்கள் சிங்களவர்கள் அவ்வாறு இருக்க ஏன் சிங்களவர்களை ஒடுக்க நினைக்கிறீர்கள். அதற்கு எதிராக பேசுவது தவறா ? முஜிபுர் றஹ்மான் அஸாத் சாலி போன்றவர்களின் நிலைப்பாட்டிலேயா மௌலவி மார்கள்களும் உள்ளீர்கள் என நான் கேட்க விரும்புகிறேன்.

ஈஸ்டர் தாக்குதல் இஸ்லாம் அடிப்படைவாதம் தொடர்பில் ஆதரங்களுடம் வெளிக்கொண்டுவந்தவர் ஞானசார தேரர் அவருக்கு ஆதரவாக கத்தோலிக்க சமூகம் முன்வர வேண்டும்.

மேலும் இந்த வழக்குடன் தொடர்புபட்ட தான் கூறிய விடயங்களால் எந்தவொரு சமூகத்தின் மனது புண்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கோருவதாக ஞானசார தேரர் நீதிமன்றில் கூறியிருக்கும் நிலையில் அசாத் சாலி

மற்றும் முஜிபுர் ராஹ்மானின் அதே அடிப்படைவாத நிலைப்பாட்டிலா இந்த நாட்டின் சம்பிரதாய இஸ்லாம் மௌலவிகள் உள்ளார்கள் என நான் கேட்க விருப்புகிறென்.

இது தொடர்பில் அவர்கள் பகிரங்க அறிவிப்பு ஒன்றை மேற்கொள்ள வேண்டும். ஞானசார தேரர் யுத்தத்தை வெற்றிகொள்ள பாரிய பங்காற்றியவர். இஸ்லாமிய அடிப்படிவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்தவர்.அவர் ஒருபோது பொல்லு வாள் எடுத்து முஸ்லிம்களை தங்குமாறு கோரவில்லை.

ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்ற காலத்தில் பள்ளிவாயல்கள் வால்கள் கைப்பற்றப்பட்டன ஆனால் நாம் ஒருபோதும் பௌத்த விகரைகளில் வாள்களை பதுக்கி வைக்கவில்லை.அவற்றுக்கு நீதி நிலைநாட்டப்படாமல் 2016ல் இடம்பெற்ற எதிர்பாரா சம்பவத்திற்கு தண்டனை வழங்கப்பட்டமை தொடர்பில் நாம் வருந்துகிறோம் என அவர் குறிப்பிட்டார்.

அல்லாஹ் என்று ஒரு கடவுள் இருந்தால் ஆசாத் சாலி முஜிபர் ரஹ்மான் போன்ற அடிப்படைவாதிகளுக்கு உதவ மாட்டார்.

Post a Comment

0 Comments