Ticker

6/recent/ticker-posts

பங்களாதேஷுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வெற்றி


பல்வேறு சாதனைகளை புதுப்பித்து பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 328 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

சிலட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 280 ஓட்டங்களை பெற்றதுடன் பங்களாதேஷ் அணி 188 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை தனது இரண்டாம் இன்னிங்ஸில் 418 ஓட்டங்களை குவித்தது.

அணித்தலைவர் தனஞ்சய டி சில்வா 2 இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசியதுடன் 10 வருடங்களின் பின்னர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்த முதல் இலங்கை வீரராக பதிவானார்.

இளம்வீரர் கமிந்து மென்டிஸூம் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசி இலங்கை அணியின் துடுப்பாட்டத்தை ஸ்திரப்படுத்தினார்.

511 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய பங்களாதேஷ், தனது இரண்டாவது இன்னிங்ஸில் 182 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

இந்த வெற்றியுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் புள்ளிப்பட்டியலில் இலங்கை அணி இரண்டு இடங்கள் முன்னேறியுள்ளது.

அதற்கமைய டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப்பின் புள்ளிப்பட்டியலில் இலங்கை அணி ஆறாமிடத்தில் உள்ளது.

Post a Comment

0 Comments