பியகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 15 கிலோ 81 கிராம் ஐஸ் போதைப்பொருள், 14 கிலோ 527 கிராம் ஹேஷ் போதைப்பொருள் மற்றும் 941 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.


பண்டாரவத்தை பிரதேசத்தில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன் அவர் வாழ்ந்த வீடு மற்றும் காரினை சோதனை செய்தபோதே இந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர் போமிரிய கடுவலை பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது இந்த சந்தேக நபர் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.


நேற்று (26) இரவு பண்டாரவத்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதன்போது ஒருவரிடம் இருந்து 02 கிராம் 310 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் மற்றைய நபாிடம் இருந்து 05 கிராம் 310 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.


சந்தேகநபர்கள் 31 மற்றும் 40 வயதுடைய கடுவலை மற்றும் சியம்பலாபே பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.


சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன