கழுத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 17 வயது மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மின்னேரிய யாய 04 கிரித்தலே பகுதியில் நேற்று (14) இரவு இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

குறித்த மாணவி தனது குடும்பத்தினருடன் உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்றிருந்த போதே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.


துப்பாக்கிச்சூடு நடத்தியது யார் என்பது இதுவரை தெரியவராத நிலையில், மின்னேரியா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


குறித்த மாணவி பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.