நாளுக்கு நாள் சமூக ஊடகங்களின் பாவனை அதிகரித்துள்ள நிலையில், அவற்றில் ஏமாற்றுப் பேர்வழிகளின் செயல்களும் அதிகரித்துக்கொண்டே காணப்படுகின்றது.

அண்மைக்காலமாக பேஸ்புக்கின் மேசஞ்சரில் (Messenger) தொடர்புகொள்ளும் சில ஹக்கர்களின் ஏமாற்று வித்தை அரங்கேறி வருகின்றது.

இவ்வாறான ஹக்கர்கள் பேஸ்புக் கணக்குகளுக்குள் நுழைந்து மேசஞ்சர் ஊடாக குறித்து நபரின் மேசஞ்சருக்கு தொடர்புகொள்கின்றார்.


பேஸ்புக்கை ஹக்செய்து அவர்களுக்குப் பரீட்சயமான நண்பர்களின் போலி கணக்குகள் ஊடாக, அல்லது அழகிய பெண்களின் புகைப்படத்துடன் கூடிய கணக்குகள் ஊடாக மேசஞ்சரில் தொடர்புகொண்டு அவர்களை ஒரு குழுவில் இணைக்க விரும்புவதாகவும் அதற்கு அவர்கள் தொலைபேசி எண் வேண்டும் எனவும் கேட்கிறார்கள். அதைத் தொடர்ந்து குழுவில் இணைக்க ஒரு OTP வந்திருக்கும் என்று கேட்பார்கள். அதைக் கொடுத்துவிட்டால் உங்கள் தனிப்பட்ட தரவுகள் அனைத்தையும் திருடிவிடுவார்கள்.