தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பில் அலி சப்ரி ரஹீமின் பாராளுமன்ற வருகை இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழுவின் தலைவர் சமல் ராஜபக்ஷவினால் 2024 ஜனவரி 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பரிந்துரைகளின் பிரகாரம் இந்த இடைநிறுத்தம் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்