ஹமாஸ் போராளிகள் பிடியில் உள்ள இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்கக் கோரி இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கி ஐந்து மாதங்கள் கடந்துவிட்டன.
இருப்பினும், அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பிறகு, ஹமாஸால் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் இன்னும் ஹமாஸின் காவலில் உள்ளனர்.
பணயக்கைதிகளின் புகைப்படங்களை ஏந்தியவாறு போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி பணயக்கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அரசும் போராட்டக்காரர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டு வருகிறது.
0 Comments