அலகல்ல மலையிலிருந்து தவறி வீழ்ந்த கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர் வைத்தியசாலையில் அனுமதி!

அலகல்ல மலையிலிருந்து தவறி விழுந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர்  இன்று ஞாயிற்றுக்கிழமை (10) சிகிச்சைக்காக மாவனல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

வயம்ப பல்கலைக்கழகத்தில் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்கும் கல்முனை பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய பல்கலைக்கழக மாணவனே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இன்று  மாணவர் குழுவுடன் அலகல்ல மலையில் ஏறச் சென்றபோதே குறித்த மாணவன் தவறி விழுந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. 

இளைஞனை மீட்கும் நடவடிக்கையில் பெரகலை இராணுவ முகாமின் அதிகாரிகள் ஈடுப்பட்டனர் . 

காயமடைந்த பல்கலைக்கழக மாணவியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது .

தினமும் செய்திகளுடன் இணைந்து கொள்வதற்கு👉

https://chat.whatsapp.com/CHvriqHAupm8BR0QrPLimz