Ticker

6/recent/ticker-posts

துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் கைதாகி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இருவரை பார்வையிட வந்தவர்கள் வழங்கிய பாலை குடித்ததால் இருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் கொழும்பில் பதிவு.


ஜிந்துபிட்டிய பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் வுல்பென்டல் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் இருவர் அவர்களைப் பார்வையிட வந்தவர்கள் வழங்கிய பால் பக்கெட்டை அருந்திய பின் இன்று (7) கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


சந்தேக நபர்கள் இருவரும் பால் பக்கெட்டுகளை அருந்திய பின்னர் சுயநினைவை இழந்ததாகவும், பாலில் நச்சு கலந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


சந்தேக நபர்களுக்கு பால் பக்கெட்டுகளில் சயனைட் கலந்து குடிக்க கொடுக்கப்பட்டதாக பொலிஸார் குற்றம் சாட்டுகின்றனர்.


சுகயீனமடைந்த சந்தேக நபர்களில் ஒருவரே கடந்த ஜனவரி 24ஆம் திகதி ஜிந்துபிட்டிய பிரதேசத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்றதாக சந்தேகிக்கப்படுபவர் எனவும் மற்றைய சந்தேகநபர் தகவல் வழங்குபவராக செயற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என அடையாளம் காணப்பட்ட சேருநுவர பகுதியைச் சேர்ந்த சமிந்து தர்ஷன் (27) மற்றும் கொழும்பு - 13 ஐச் சேர்ந்த லக்ஷித பெர்னாண்டோ (29) ஆகியோர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments