பண்டாரகம - அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த 09 வயதுடைய பாத்திமா ஆயிஷாவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு 27 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


பாணந்துறை உயர் நீதிமன்றத்தினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், குற்றவாளி உயிரிழந்த சிறுமியின் தாயாருக்கு 30 இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.