மாத்தறை - பெலியத்தை பகுதியில் இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நபரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி டிஃபென்டர் காரில் பயணித்த 5 பேர் இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இறந்தவர்கள் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள். தகவல் தெரிவிக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு T-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான அந்தந்த வாகனத்தில் கலபொடஅத்தே ஞானசார தேரர் அங்கம் வகித்த அப்பே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேராவும் பயணித்ததாக செய்தியாளர் மேலும் குறிப்பிடுகின்றார்
0 Comments