ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் டோக்கியோவின் ஹனிடா விமான நிலையத்தின் ஓடுபாதையில் தீப்பற்றிக்கொண்டது.


அந்தப் படங்களை ஜப்பானின் NHK செய்தி நிறுவனம் வெளியிட்டது.

இந்த வீடியோவானது, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தில் 367 பேர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

( விமானத்தில் இருந்த  பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டதாக விமான நிறுவனத்தை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன)

மேலும் இச்சம்பவத்தால் உயிர் சேதம் எதுவும் ஏற்பட்டுள்ளதா என்பதனைப் பற்றிய தகவல்கள் வெளிவரவில்லை.

இப்போதைக்கு பலரும் வெளியேற்ற பட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


மேலும் இந்த விபத்திற்கான காரணம் குறித்தும் தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது