ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் காரணமாக ஏடன்வளைகுடாவில் எண்ணெய்கப்பலொன்று தீப்பிடித்து எரிவதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
ஹெளத்திகிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலால் மார்லின் லுவாhன்டா என்ற கப்பல் தீப்பிடித்துள்ளது என கப்பலை இயக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கப்பலின் எண்ணெய் தாங்கியொன்று தாக்கப்பட்டுள்ளதால் கப்பல் தீப்பிடித்து எரிவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கப்பல் எதிர்ப்பு ஏவுகணை எண்ணெய் கப்பலை தாக்கியுள்ளது என தெரிவித்துள்ள அமெரிக்க அதிகாரிகள் கடற்படை கப்பலொன்று உதவிக்கு விரைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
காயங்கள் குறித்த தகவல்கள் எதுவுமில்லை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போர்க்கப்பல்கள் அந்த கப்பலை நோக்கி சென்றன மாலுமிகள் பாதுகாப்பாக உள்ளனர் என பிரிட்டனின் கடல்சார்வர்த்தக நடவடிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.
ஏனைய கப்பல்கள் எச்சரிக்கையுடன் பயணிக்கவேண்டும் சந்தேகத்திற்கு இடமான விடயங்களை அவதானித்தால் அறிவிக்கவேண்டும் என பிரிட்டன் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை மார்லின் லுவான்டா கப்பலை இலக்குவைத்ததை ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
பல பொருத்தமான ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதலை மேற்கொண்டதாக ஹெளத்திகிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
0 Comments