Ticker

6/recent/ticker-posts

பிரபல ஐஸ் வியாபாரி ஒருவரை ஐஸ் போதைப்பொருளுடன் கைதுசெய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவிப்பு


காத்தான்குடி பிரதேசத்தில் ஐஸ் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பிரபல ஐஸ் வியாபாரி ஒருவரை ஐஸ் போதைப்பொருளுடன் கைதுசெய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஜி. கஜநாயக்க தெரிவித்தார்.

புதிய காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள வாகனம் திருத்துமிடம் ஒன்றில் வைத்து குறித்த ஐஸ் வியாபாரி இரண்டு கிராம் 110 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பொலிசாரிடம் சிக்கியுள்ளார்.

அதே நேரம் காத்தான்குடி அலியார் சந்தியில் வைத்து இரண்டு கிராம் 45 மில்லி கிராம் போதை பொருளுடன் 29 வயது நபர் ஒருவரும் உள்ள வீதியில் வைத்து 190 மில்லி கிராம் அபினுடன் 54 வயது நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்

வாகனம் திருத்தும் இடத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள ஐஸ் வியாபாரியை தடுத்து வைத்து விசாரணை செய்யுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரம் ஏனையவர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்

Post a Comment

0 Comments