Ticker

6/recent/ticker-posts

வெளிநாட்டு வேலை வாய்ப்பு குறித்து வெளியாகும் போலி விளம்பரங்களில் சிக்க வேண்டாம்


சரியான முறையில் வெளிநாடு செல்வதன் மூலம் ஏற்படும் பிரச்சினைகளுக்கு மாத்திரமே இலங்கை அதிகாரிகளால் தலையீடு செய்ய முடியும் எனவும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போலி விளம்பரங்களில் சிக்கிக் கொள்ள வேண்டாம் எனவும் பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மியான்மாரில் இலங்கையர்கள் குழுவொன்று இணைய அடிமைத்தனம் என்ற அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனித கடத்தல் மற்றும் கடல்சார் குற்றப்பிரிவு என்பன விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

தற்போது மியன்மாரில் இருக்கும் இலங்கையர்களை மீட்பதற்காக வெளிவிவகார அமைச்சு ஏற்கனவே யங்கூனில் உள்ள இலங்கை தூதரகத்தின் உதவியை நாடியுள்ளது.

இந்தியா, பூட்டான், பங்களாதேஷ், மியான்மார், தாய்லாந்து மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுடன் இணைந்து சிறைபிடிக்கப்பட்ட இலங்கையர்களை மீண்டும் தாயகத்திற்கு அழைத்து வருவதற்கான செயற்பாடுகள் இடம்பெறுவதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments