Ticker

6/recent/ticker-posts

பதற்றத்தில் தமது நாட்டு பணயக் கைதிகளையே சுட்டுக்கொன்ற இஸ்ரேல் இராணுவம் ; இதனால் தான் தாங்க முடியாத சோகத்தில் உள்ளதாக நெதன்யாகு அறிவிப்பு


இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போர் தீவிரம் அடைந்துள்ளது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக இந்த போர் நீடித்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழித்து கட்டும் வரை போர் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.


இந்த நிலையில், இஸ்ரேல் படைகள் தவறுதலாக பணயக்கைதிகளை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் இராணுவம் நேற்று தெரிவித்தது.


இது தொடர்பாக இஸ்ரேல் இராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், "காசா முனையில் இஸ்ரேலிய படைகள் பணயக்கைதிளை பார்த்து இருக்கிறார்கள். அவர்கள் அச்சுறுத்தல்காரர்கள் என தவறுதலாக நினைத்து பதற்றத்தில் மூன்று பணயக்கைதிகளை கொலை செய்து விட்டனர்" எனத் தெரிவித்துள்ளார். பணயக்கைதிகளை இஸ்ரேல் இராணுவமே கொன்றது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், பணயக்கைதிகள் கொல்லப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தாங்க முடியாத சோகம் என்றார். மேலும், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" எனவும் கூறினார்

Post a Comment

0 Comments