மனைவியை தாக்கி விட்டு 13 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று புதன்கிழமை (27) இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டவர் அநுராதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தராவார்.
மனைவியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் அநுராதபுரம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்
0 Comments