Ticker

6/recent/ticker-posts

VIDEO இணைப்பு : சஜித் பிரேமதாச ஆற்றிய உரையை தாங்க முடியாமல் பாய்ந்து வந்து தடுத்த ஆளும் கட்சி எம்.பி.க்கள் .


பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து 5 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சபை அமர்வு 30 நிமிடங்களுக்குப் பின்னர் ஆரம்பமானது.

இதன் போது சபைக்குள் கையடக்க தொலைபேசிகளைப் பயன்படுத்தி புகைப்படம், வீடியோ எடுத்தல் மற்றும் நேரலை (Live) ஒளிபரப்பு போன்றவற்றை தவிர்க்குமாறு சபாநாயகர் உத்தரவிட்டார்

அத்தோடு பாராளுமன்ற ஒழுங்கு விதிகளை மீறி செயற்படுவோருக்கு எதிராக கடும் நடபவடிக்கை எடுக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆற்றிய உரையொன்றை ஆளுங்கட்சி எம்.பிக்கள் குழப்பி அவரின் ஆசனத்தை நோக்கிவந்து முற்றுகையிட்டதால் சபையை கட்டுப்படுத்த முடியாத நிலையில் சபை நடவடிக்கைகளை 5 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது


( இலங்கையின் அந்நியச் செலாவணி வீழ்ச்சியடைந்ததற்கு உச்ச நீதிமன்றத்தினால் பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களே காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

“பொதுச் சொத்துக்களுக்கு எதிரான குற்றச் சட்டத்தின் கீழ் இந்த நபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யுமாறு அட்டர்னி ஜெனரலுக்கு ஏன் அறிவுறுத்தப்படவில்லை? குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அரச அதிகாரிகளிடமிருந்து நாட்டின் இழந்த வருமானத்தை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? இதற்கான காலக்கெடு என்னவாக இருக்கும்? மேலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அதற்கான காரணம் என்ன?'' என்று கேள்வி எழுப்பினார். 

எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விகளால், ஆளும் கட்சி எம்.பி.க்கள் பலர் அவரை நோக்கி பாய்ந்து அவரது உரைக்கு இடையூறு விளைவித்ததை அடுத்து, சபாநாயகர் நாடாளுமன்றத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்தார்)

Post a Comment

0 Comments