காசாவில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் ஜநாவால் நடத்தப்படும் தங்குமிடம் மற்றும் மருத்துவமனையில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
காசாவின் ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேல் இராணுவத்திற்கும் கடந்த 7 ஆம் திகதி ஆரம்பமான போர் இன்று 29 ஆவது நாளாக நீடித்து வருகின்றது.
வான்வழித் தாக்குதலை மேற்கொண்டு வந்த இஸ்ரேல் இராணுவம் காசாவிற்குள் நுழைந்து தரைவழித் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் ஜநாவால் நடத்தப்படும் தங்குமிடம் மற்றும் மருத்துவமனையில் இஸ்ரேல் இராணுவம் இன்று நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
காசா நகருக்கு வடக்கே ஐநாவால் நடத்தப்படும் தங்குமிடத்தை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் இன்று வான்வழித் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் 20 பேர் பலியாகியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 50 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும் காசா நகரில் உள்ள நாசர் மருத்துவமனையின் வாயிலில் இன்று நிகழ்த்தப்பட்ட மற்றுமொரு தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாக சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மேதத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
0 Comments