லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க அந்த நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, நாளைய தினம் (04) முதல் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப் படவுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
அந்த வகையில் ,12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 75 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையில் சமையல் எரிவாயு விலை அதிகரித்துள்ள பின்னணியிலேயே, லிட்ரோ நிறுவனம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளது.
0 Comments