இஸ்ரேல் மீது ஹமாஸ் உள்ளிட்ட பாலஸ்தீனிய ஆயுத குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகின்றது.
பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பும் , மேற்குகரை பகுதியை முகமது அப்பாஸ் தலைமையிலான அரசாங்கமும் நிர்வகித்து வருகின்றன.
ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பை போன்றே பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உட்பட மேலும் சில ஆயுதக்குழுக்களும் காசா முனை மேற்கு கரையில் செயல்பட்டு வருகின்றன.
மேற்குகரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீனிய குழுக்களுக்கும் இடையே மோதல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்த பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களின் திடீர் தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் அதிரடியாக களமிறக்கப்பட்டுள்ளனர்.
மேலும், போர் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், போருக்கு தயார் என்றும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது காசா முனையில் இருந்து ஹமாஸ் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள் திடீரென அதிரடி தாக்குதல் நடத்தி வருவதால் மத்திய - கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இறுதியாக கிடைத்த தகவல்படி
காசாவில் இருந்து வெறும் 20 நொடிகளில் 5000 குண்டுகள் இஸ்ரேலை நோக்கி பயந்த நிலையில் அந்நாடு போர் நிலையை அறிவித்துள்ளது.
தெற்கு, மத்திய பகுதிகளில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு சைரன் மூலம் எச்சரிக்கை.
தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஹமாஸ் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக தகவல்.
ஆபரேஷன் அல்-அக்சா ஃப்ளட்-ஐ அறிவித்து 20 நிமிடங்களில் 5,000 ராக்கெட்டுகள் ஏவப்பட்டன
தினமும் செய்திகளுடன் இணைந்து கொள்வதற்கு👉
0 Comments