இஸ்ரேல், காசாவில் உள்ள அஹ்லி அரபு வைத்தியசாலை மீது மேற்கொண்ட விமானத் தாக்குதலில் 500 பேர் வரை கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


அல்-அஹ்லி வைத்தியசாலை மீது மேற்கொண்ட தாக்குதலின் புகைப்படங்களை வெளியிட்டு 500 பேர் கொல்லப்பட்டதாக குறித்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இங்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இடைவிடாத தாக்குதல்களில் இருந்து மருத்துவ சிகிச்சையை பெற்று வருகின்றனர்.


தாக்குதலுக்குள்ளான வைத்தியசாலை குழந்தைகள் நிறைந்த வைத்தியசாலை என்பது குறிப்பிடத்தக்கது.