இஸ்ரேல் பயங்கரவாதிகள் தரை, வான் மற்றும் கடல் வழியேயான தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.


இந்நிலையில், தெற்கு இஸ்ரேலின் எல்லையருகே காசாவை முற்றுகையிடும் வகையில், நூற்றுக்கணக்கான பீரங்கிகள் மற்றும் இராணுவ வீரர்களை இஸ்ரேல் குவித்துள்ளது.
" தயாராக இருங்கள் எந்த நேரத்திலும் உங்களுக்கு தகவல் வரும் " எனவும் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

லெபனான் பகுதியில் இருந்து ஏவப்பட்ட 9 ரொக்கெட்டுகளில் 4 ரொக்கெட்டுகள் இடைமறித்து அழிக்கப்பட்டன என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.


இஸ்ரேல் படைகளை நோக்கி, பீரங்கிகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளும் லெபனானில் இருந்து ஏவப்பட்டன என இஸ்ரேல் படைகள் தெரிவித்தன.

இதனை தொடர்ந்து, லெபனானின் எந்த பகுதியில் இருந்து இஸ்ரேலுக்குள் ரொக்கெட் ஏவப்பட்டதோ, அந்த பகுதியை இலக்காக கொண்டு இஸ்ரேல் படைகள் பதிலடி கொடுத்தன என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.