கல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் ( தேசிய பாடசாலை ) நேற்று(04) வெளிவந்த க.பொ.த (உ/த)பரீட்சை பெறுபேறுகள் பாடசாலை வாரலாற்றில் சாதனை படைத்துள்ளது.

கலைப்பிரிவில் 16 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றினர். அதில் 12 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன் 08 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கான தகுதியை பெற்றுள்ளனர். இப் பெறுபேறுகளானது இப் பாடசாலை வரலாற்றிலேயே முதன் முதலாக அடையப்பட்ட சாதனை முடிவாகும்.


எம்.எஸ்.எப் நதா-3A

ஏ.எப் நுஸ்மா- 3A

எம்.எம்.எப் ரஸ்பா- 3A

பி.எம்.எப் இல்பா- 3A

ஏ.என்.எப் ரிசா- 2A,B

எம்.என்.எப் றுசைனி-2A,B

பி.எப்.சர்ஜுனா -2A,B

ஏ.எப்.ஹப்ஸா -A,2B 

ஆகிய மாணவிகளே பல்கலைக்கழக அனுமதியினை பெற்று தெரிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இப் பாடசாலைக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பதில் பெற்றோர்களின் மனநிலை மற்றும் கற்றல் செயற்பாடுகளில் மாணவர்களின் ஆர்வமின்மை போன்ற பல காரணங்கள் குறைகளாக காணப்பட்ட போதிலும் கடந்த 2021.08.01ம் திகதி புதிய அதிபராக கடமையேற்ற எம்.எஸ்.எம்.பைசால் அவர்களின் ஆளுமையினாளும், திறமையினாலும் ,பாடசாலை ஆசிரியர்களின் அயராத உழைப்பினாலும், பாடசாலை அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர்களின் ஒத்துழைப்புக்களினாலும் குறுகிய காலத்திற்குள் 08 மாணவர்களை ஒரே தடவையில் க.பொ.த (உ/த ) பரீட்சையில் சித்தி பெற வைத்து வெற்றபெற வைத்தமை பாராட்டத்தக்க வரலாற்று நிகழ்வாகும்.என்பதோடு இப் பாடசாலைக்கு கிடைத்த வெற்றியுமாகும்.


கல்முனை முஸ்லிம் கல்விக் கோட்டத்தில் முன்னணி பாடசாலையாக திகழும் இப்பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம் பைசாலின் வழிகாட்டலினாலும், பெற்றோர் ,ஆசிரியர் மாணவர்களின் அயராத முயற்சியினாலும் பெறப்பட்டுள்ள இந்த வெற்றிக்கு காரணமாக துணை புரிந்த அனைவருக்கும் பாடசாலை சமூகத்தினர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

மேலும் இப் பாடசாலையில் பெளதீக வள தேவைகள் அதிகமாக காணப்படுகின்றன.இதற்கு பாடசாலை அபிவிருத்தி குழு மற்றும் பழைய மாணவர்கள் ஆகியோர் கடும் கஷ்டங்களுக்கு மத்தியில் தனவந்தர்கள் மற்றும் பெற்றோர்களை கொண்டு பல அபிவிருத்தி சார்ந்த வேலைகளையும் கல்விசார் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். 

எனவே அதற்கான ஒத்துழைப்புக்களையும் உதவிகளையும் ஊர் நலன் விரும்பிகள் முன்வந்து பாடசாலையின் நலனுக்காக செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுகின்றது.

இப் பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்காக அரும்பாடு படும் கல்முனை பிரிலியண்ட் விளையாட்டு கழகம் அத்துடன் புதிய உத்வேகத்துடன் அதிபரோடு தோளோடு தோளாக செயற்படும் அபிவிருத்தி நிறைவேற்று குழு மற்றும் பழைய மாணவர்கள் சங்கம் ஆகியோரின் செயற்பாடுகளும் ஒத்துழைப்புகள் மேலும் மேலும் இப் பாடசாலையின் உயர்வுக்கு ஏணியாக அமைய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சிறந்த பெறுபேற்றை பெற்று பாடசாலை சமூகத்திற்கு புகழை தேடித் தந்த மாணவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

மேற்படி பெறுபேறு கிடைப்பதற்கு அயராது உழைத்த பாடசாலையின் , பிரதி அதிபர், எம்.ஏ சலாம் , உதவி அதிபர் இ. ரினோஸ் ஹஜ்ரீன்,

உயர்தரப் பிரிவு பொறுப்பாளர் யூ.எல் ஸெயினுல் ஆப்தீன், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கத்தினர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.