Ticker

6/recent/ticker-posts

சேனல் 4 Trailer வீடியோ இணைப்பு >> உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்கு, ராஜபக்ஷ குடும்ப விசுவாச அதிகாரிகள் உடந்தை என வெளியாகியுள்ள குற்றச்சாட்டு


ராஜபக்ஷ குடும்பத்துக்கு விசுவாசமான இலங்கை அதிகாரிகள் 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புக்கு உடந்தையாக இருந்தனர் என்று உயர் மட்ட உண்மை விளம்பிகள் குற்றம் சாட்டுவதாக இங்கிலாந்தை தளமாகக் கொண்ட டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்தின் சனல் 4 தொலைக்காட்சியில் இன்றையதினம் (05) ஒளிபரப்பப்படவுள்ள ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் குறித்த ஆவண நிகழ்ச்சி குறித்தே மேற்குறிப்பிட்ட தகவலை அந்த ஊடகம் வெளியிட்டுள்ளது.
( Trailer video இணைப்பு )

2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற சந்திப்பு ஒன்றின் பின்னர் சிரேஷ்ட இராணுவ புலனாய்வுத் துறை அதிகாரியான சுரேஷ் சாலி தன்னிடம் வந்து, ராஜபக்ஷர்களுக்கு இலங்கையில் பாதுகாப்பற்ற சூழல் தேவை என்றும் கோட்டாபய ஜனாதிபதியாக வருவதற்கு அதுவே ஒரே வழி என்றும் ஹன்சீர் ஆசாத் ம ௌலானா தெரிவித்தாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


தாக்குதல் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் செய்யப்பட்ட திட்டம் அல்ல என்றும் இரண்டு, மூன்று வருடங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.




ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு 
பாதுகாப்பை மீட்டெடுப்பதாக வாக்குறுதி அளித்ததன் பேரில் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியைப் பிடித்தபோது சாலி இராணுவப் புலனாய்வுத் தலைவராக பதவி உயர்வு பெற்றார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தாக்குதல்களில் சக்தி வாய்ந்த ராஜபக்ஷ குடும்பத்தின் தொடர்பு இருப்பதாக நீண்ட காலமாக இலங்கையில் வதந்திகள் பரவி வந்த போதும், சனல் 4 செய்தியின் முன்னாள் ஆசிரியர் பென் டி பியர் நிறுவிய பேஸ்மென்ட் பிலிம்ஸ் தயாரித்த ஆவணப்படத்தில், உயர்மட்ட உண்மை விளம்பி (ஓர் அமைப்பின் உள்ளிருந்து கொண்டே அதில் நடக்கும் தவறுகளை அம்பலப்படுத்துபவர்) பேசுவது இதுவே முதல் முறையாகும் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலாவது உண்மை விளம்பியான ம ௌலானா பல ஆண்டுகளாக ராஜபக்ஷர்களுக்கு விசுவாசமான அரசியல்வாதியான பிள்ளையானுக்கு உதவியாளராக பணியாற்றியதுடன், அரசியல் எதிரியை கொலை செய்த
குற்றச்சாட்டில் சிறையில்
இருந்தபோது குண்டுதாரிகளை
சந்தித்துள்ளார்.

கடந்த ஆண்டு இலங்கையை
விட்டு வெளியேறிய ம ௌலானா
ஐரோப்பிய புலனாய்வு
அமைப்புக்கள் மற்றும் ஐக்கிய
நாடுகள் சபையிடம் தனது
சாட்சியத்தை முன்வைத்துள்ளார்.


இரண்டாவது உண்மை
விளம்பியான, பெயரிடப்படாத
சிரேஷ்ட அரசாங்க அதிகாரி,
தாக்குதலாளியுடன் சாலியின்
உறவுகள் பற்றிய ம ௌலானாவின்
கருத்தை ஆதரித்துள்ளார் என்றும்
அந்த ஊடகம் தெரிவிக்கிறது.


குற்றச்சாட்டுகளை “முற்றிலும்
பொய்” என்றும், திரைப்பட
தயாரிப்பாளர்களுடன் பேசிய
நபர்களுடன் எந்த தொடர்பும்
இல்லை என்றும் சேனல் 4
க்கு எழுதிய கடிதத்தில் சாலி
மறுத்துள்ளார்.


சனல் 4 இன் கருத்துக்கு
பிள்ளையானோ அல்லது
ராஜபக்ஷ குடும்பத்தினரோ
பதிலளிக்கவில்லை என்றும்
அந்த ஊடகம் தனது செய்தியில்
குறிப்பிட்டுள்ளது.
Trailer video.

தினமும் செய்திகளுடன் இணைந்து கொள்வதற்கு👉 

https://chat.whatsapp.com/KGLkRIkHz4A47YytsKqt9F

Post a Comment

0 Comments