Ticker

6/recent/ticker-posts

VIDEO : லொத்தர் சீட்டிழுப்பில் ஏழரை கோடி ரூபாய் வென்ற அக்குரனை பிரதேச நபரை கும்பல் ஒன்று கடத்திச் சென்ற பரபரப்பான சம்பவம் பதிவு.


லொத்தர் சீட்டிழுப்பில் ஏழரை கோடி ரூபா பெறுமதியான பரிசு பெற்ற நபரை கடத்திச் சென்ற குழுவொன்றை கம்பளை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் கம்பளை குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து கைது செய்துள்ளனர்.

லொத்தர் சீட்டிழுப்பில் வெற்றி பெற்றவர் அக்குறணை பிரதேசத்தில் வசிப்பவர் என்பதுடன், கடந்த 27ஆம் திகதி தம்புள்ளையில் வைத்து கடத்தப்பட்டு கம்பளையில் உள்ள வீடொன்றில் பத்து நாட்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் கம்பளை பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து அவர் கொடூரமாக தாக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடத்தல் சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அதில் மர ஆலை உரிமையாளரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தினமும் செய்திகளுடன் இணைந்து கொள்வதற்கு👉 

https://chat.whatsapp.com/KuMjVS9PjwsJTd10BMK96T

Post a Comment

0 Comments