பொகவந்தலாவ நுவரெலியா பிரதான வீதியில் வென்ஜர், டில்லேரி தோட்டத்திலுள்ள கால்வாய் ஒன்றில் சிசுவின்சடலம் இன்று (24) திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளது. 

பொலித்தீன் பையில் சுற்றப்பட்டு வீசப்பட்டுள்ள சிசுவின் சடலம் முதிர்ச்சியடைந்தது எனவும், கருக்கலைப்பு செய்யப்பட்ட பின்னர் இந்த இடத்திற்கு கொண்டு வந்து வீசப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இன்றைய தினம் காலை குறித்த பகுதியிலுள்ள நபரொருவர் நோர்வூட் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே இச்சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

தினமும் செய்திகளுடன் இணைந்து கொள்வதற்கு👉 

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6