கட்டுநாயக விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்ட விமானத்தினால் அருகிலுள்ள வீடுகள் மற்றும் பல உடைமைகள் சேதம்.
=====================================
2023/07/19 #பர்ஹானா_பதுறுதீன்
கட்டுநாயக விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக வந்த விமானம் ஒன்று திடீரென மீண்டும் மேலே உயத்தப்பட்டதால் கீழிருந்த வீடுகள் மற்றும் சொத்துகளுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இருந்து பறந்துவந்த இவ்விமானம் கட்டுநாயக விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக வந்த நிலையில் விமானம் மிகவும் பனிவான வான்பரப்பில் பறந்தந்ததினால் விமானி திடீரென மேல் நோக்கி விமானத்தை உயர்த்தியுள்ளார். அந்நேரம் விமானத்தின் எஞ்சின் வெளியிட்ட அதிக சப்தத்தினாலும், அதனால் தொடர்சியாக வெளியான பலத்த வாய்வுக் காற்று அதிர்வும் ஏற்பட்டுள்ளது.
இவ்விமானத்தினுள் 292 பயணிகளும், 12 விமான ஊழியர்களும் பயணித்ததுடன் இவ் விமானம் (ஒரு எஞ்சின்) 75000 குதிரைவலுசக்தி கொண்ட இரண்டு எஞ்சின்களைக் கொண்ட விமானமாகும்
தாழ்வாகப்ப் பறந்து தரையிறக்க முற்பட்ட இவ்விமானம் பயணிகளின் பாதுகாப்புக் கருதி திடீரென மேலுயர்த்தப்பட்டதுடன் இதனால் தரையில் விமான நிலையம் தொடக்கம் கடவல மங்கலாராம விகாரை வரையான 5 கிலோமீட்டர் நிலப்பரப்பு பிரதேசத்தினுள் அமைந்துள்ள வீடுகள் சொத்துகளுக்கு அணர்த்தங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது...
இச்சம்பவம் இன்று காலையில் நிகழ்ந்துள்ளது...
மொழிபெயர்ப்பு : #பர்ஹானா_பதுறுதீன்
தினமும் செய்திகளுடன் இணைந்து கொள்வதற்கு👉
0 Comments