இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தடை செய்யப்பட்டிருந்த ஐந்து இஸ்லாமிய அமைப்புகளின் மீதான தடையை நிபந்தனையுடன் நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


எனவே ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்த விசாரணைக்கு பின்னர், புலனாய்வு அமைப்புகளின் நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகளிற்கமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆகவே, இலங்கை அரசாங்கத்தில் தடைசெய்யப்பட்ட 11 இஸ்லாமிய அமைப்புகளில் இருந்து
1- ஜமியத்துல் அன்சாரி சுன்னத்துல் முஹம்மதியா
(JASM),


2- ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ),


3- அகில இலங்கை தவ்ஹீத் ஜமாத் (ACTJ),


4- சிலோன் தவ்ஹீத் ஜமாத் (CTJ),


5- ஐக்கிய தவ்ஹீத் ஜமாத் (UTJ)


எனும் ஐந்து அமைப்புகளின் மீதான தடையை நிபந்தனையுடன் நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


மேலும் குறித்த இந்த குழுக்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு இடையேயான கலந்துரையாடலின் பின்னரே இந்த ஐந்து அமைப்புகளின் மீதான தடை நீக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன