குடும்ப முறுகல் நிலைமை தொடா்பிலான முறைப்பாடு ஒன்றை விசாரணை செய்து கொண்டிருந்த வேளை, முறைப்பாட்டாளா் கோபமடைந்து பிரதிவாதி மீது கூரிய ஆயுதத்தால் தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

பக்கமுன பொலிஸ் நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் பிரதிவாதியும், பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் காயமடைந்து பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடா்பில் தாக்குதல் நடத்திய சந்தேகநபா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

தனது மனைவி வேறு ஒருவருடன் சென்றதாக கூறி பக்கமுன பகுதியை சோ்ந்த ஒருவா் வழங்கிய முறைப்பாட்டை விசாரணை செய்வதற்காக முறைப்பாட்டாளரையும், பிரதிவாதிகள் இருவரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்திருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முறைப்பாடு தொடர்பில் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தின் பதில் பொறுப்பதிகாரி விசாரணைகளை மேற்கொண்டிருந்த நிலையில், திடீரென முறைப்பாட்டாளர் தான் மறைத்து வைத்திருந்த கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியுள்ளதாக தொிவிக்கப்படுகிறது.