Ticker

6/recent/ticker-posts

கட்டார் ஹயா Card மல்டிபிள் என்ட்றி வி


கட்டார் ஒரு பக்கம் வேலை தேடுறுவங்களாலயும் மறுபக்கம் டுவரிஸ்டாலயும் நிரம்பி வளிகின்றது. பீபா நடைபெற்ற போது ஹயா கார்ட் என்ற ஒன்றை கட்டார் அறிமுகம் செய்திருந்தது. அது யாருக்கு எண்டா பீபா பார்ப்பதற்காக கட்டாருக்கு வந்த வெளிநாட்டு ரசிகர்களுக்குதான் கொடுத்தாங்க.


அந்த நேரம் ஹயா கார்ட் வைத்திருப்பவர்கள் அத வெச்சி தனது நெருங்கிய உறவினரை கட்டாருக்கு டுவரிஸ்டாக எடுக்க முடியும் என்ற ஒரு சலுகையையும் வழங்கியிருந்தது. சஊதி கூட ஹயா கார்ட் உள்ளவர்கள் வீசா இல்லாம சஊதிக்க வரமுடியும் என்றும் சொல்லியிருந்தது.


அப்போ இந்த சலுகை கடந்த 2023 ஜனவரி 31 உடன் முடிவடைவதாகவே கட்டார் அறிவித்திருந்தாலும் இப்போ அதனை அடுத்த வருடம் ஜனவரி 24 ஆம் திகதி வரை நீடித்திருக்கின்றது. 


இது மட்டுமில்லாம இப்போ ஹயா கார்ட்டுக்கு விரும்பின யாரையும் எடுக்கலாம். ஒருத்தர் இல்ல ஐந்து பேர் வரைக்கும் எடுக்கலாமாம்.


ஹயா கார்ட் வெச்சிரிக்கிரவங்களுக்கு ஐந்து வவுச்சர் கொடுப்பாங்க அத பயன்படுத்தி நம்ம விரும்பின யாரையும் எடுக்கலாம். இதனால ஹயா வவுச்சர்ட மவுசும் அதிகமாகி பெரிய பிஸ்னஸ்சே நடந்தது. சும்மா கிடைத்த ஒரு வவுச்சர் இரண்டு, மூன்றாயிரம் றியாலுக்கு மேலும் விற்பனை செய்யப்பட்டது.


புதுசா ஒரு சிஸ்டமும் இருப்பதாக சொல்லப்படுகுது. ஹயா வவுச்சர் இல்லாமல் கட்டார் ஐடி உள்ளவங்களும் ஹயா வெப்சைட்ல போய் அப்ளை பண்ணி யாரையும் எடுக்க ஏலுமாம். அதுக்கு சின்ன தொகை ஒண்டும் கட்டோணும் போல. (இது சம்பந்தமாக இன்னம் கொஞ்சம் தேட வேண்டியுள்ளது)


சுருக்கமா சொல்ல போனால் ஒன் எரைவல் வீசாவ ஹயா என்ற பெயரில் ஒரு சிஸ்டத்துக்கு கொண்டு வந்திருக்காங்க அவ்வளவுதான். ஹயா எண்டு சொல்லிட்டு... யாரு வாறாங்க, போறாங்க, எங்க தங்குறாங்க, யார் எடுக்காங்க எங்குற டீடைல்ச எடுத்திட்டு ஒண் எரைவல் வீசா குடுக்காங்க அவ்வளவுதான் விஷயம்.


அது மட்டுமில்ல இது மல்டிபிள் என்ட்றி வீசா எங்குறதால இது இருந்தா 2024 ஜனவரி 24 க்குள் எத்தினை முறையும் கட்டாருக்கு வந்து போக முடியும். 


பொதுவா சொல்ல போனா கட்டாருக்கு விசிட் வாறது முந்தி போல கஷ்டம் இல்ல வெரி ஈசி... பாஸ்போர்ட், எங்க தங்கபோறம் எங்குற டீடெய்ல்ஸ், தங்க போற காலத்துக்கான ஹெல்த் இன்ஷுரன்ஸ் (மாசத்துக்கு 50 றியால் வருடத்துக்கு 250 றியால்), டிக்கெட்டும் இருந்தா போதும் டெக்னிகலா சில விஷயங்கள் இருக்கு அத தெரிஞ்சவங்க ஊடாக செய்திட்டு கட்டாருக்கு வந்து சுத்தி பாத்திட்டு போகலாம்.


ஹயாவுல வாறவங்க வேலை செய்ய ஏலா எண்டிருந்தாலும் பலர் தெரியாம வேலையும் செய்ராங்கதான்.


இங்க இருந்து உம்ராக்கு போறதும் கடும் ஈசி. அதே நேரம் நாட்டுல இருந்து போறத விட இங்க வந்து போறதும் கொஞ்சம் செலவும் கொறவு எண்டும் சொல்லுறாங்க. இப்ப ஹயாவுல வாறவங்களுக்கு உம்ராக்கு போக ஏலா எங்குற செய்தியும் சொல்லப்படுகுது. சில நேரம் ஹஜ் சீசன் என்பதால் கூட இப்புடி இருக்கலாம் (இது சம்பந்தமாக பொறகு தனியா எழுதலாம் எண்டு இருக்கன்)


கட்டார்ல இரிக்கிர நிறைய பேர் இப்ப பெமிலி, றிலேசன் எண்டு பலரையும் விசிட்ல கட்டாருக்கு எடுக்குறாங்க... கட்டார சுத்தி பாக்காங்க... உம்ராக்கு போறாங்க வாறாங்க... எனவே உங்கள் குளிர்கால சுற்றுலாவை கட்டார் பக்கம் வெச்சிக்கலாம்.


இந்த வாய்ப்பு தொடர்ந்து இருக்குமா இல்ல எதிர்வரும் ஜனவரியோட முடிஞ்சிருமா எங்குற சந்தேகம் இருக்கின்றது. பெரும்பாலும் நீடிப்பதற்கான வாய்ப்பு அதிகம் எண்டே சொல்லுறாங்க.


நமக்கு தெரிந்தது இவ்வளவுதான்... இதற்கு மேலயும் விஷயம் இருக்கலாம்...


Sajeer Muhaideen 
05/06/2023

தினமும் செய்திகளுடன் இணைந்து கொள்வதற்கு👉 

https://chat.whatsapp.com/KuMjVS9PjwsJTd10BMK96T

Post a Comment

0 Comments