கடவுச்சீட்டு வழங்கும் புதிய வேலைத்திட்டத்திற்கான கைரேகை எடுக்கும் பணி இன்று (19) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
நாடளாவிய ரீதியில் 51 பிராந்திய செயலகங்களில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்தார்.
இங்கு தயாரிக்கப்படும் கடவுச்சீட்டு விண்ணப்பதாரரின் வீட்டிற்கு வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்தார்.
வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெறுவதற்கு பணம் செலுத்தும் முன் விண்ணப்பப் படிவம் சரிபார்க்கப்படும் என்றும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
பிரதேச செயலகங்கள் ஊடாக நாளாந்தம் சுமார் 765 பேரின் கைரேகைகள் பெறப்படுவதாக குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
விண்ணப்பதாரர்களுக்கு கைரேகைகளை வழங்கக்கூடிய பிரதேச செயலக அலுவலகங்கள் கீழே உள்ளன.
கொழும்பு – சீதாவக, ஹோமாகம
கம்பஹா – நீர்கொழும்பு, மீரிகம, கம்பஹா
காலி – கரந்தெனிய, அக்மீமன, நெலுவ
ஹம்பாந்தோட்டை – தங்காலை, திஸ்ஸமஹாராமய
களுத்துறை – இங்கிரிய, மத்துகம, பாணந்துறை
மாத்தறை – அத்துரலிய, தெவிநுவர
குருநாகல் – வடமேல் மாகாண பிராந்திய அலுவலகம், குளியாப்பிட்டிய, நிகவெரட்டிய
மாத்தளை – நாவுல
கண்டி – கம்பளை, குண்டசாலை, பூஜாபிட்டிய
கேகாலை – கலிகமுவ, ருவன்வெல்ல
புத்தளம் – புத்தளம்
அம்பாறை – சம்மாந்துறை, பொத்துவில்
அனுராதபுரம் – கெக்கிராவ, ஹொரோவபதான
பதுளை – மஹியங்கனை, ஹப்புத்தளை
மட்டக்களப்பு – கோறளைப்பற்று (வாழைச்சேனை), காத்தான்குடி
நுவரெலியா – அம்பகமுவ, வலப்பனை
பொலன்னறுவை – எலஹெர, திம்புலாகல, ஹிகுராக்கொட
இரத்தினபுரி – பலாங்கொட, குருவிட்ட, எம்பிலிபிட்டிய
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, பருத்தித்துறை
கிளிநொச்சி – கரச்சி
மொனராகலை – புத்தல
மன்னார் – மாந்தை மேற்கு
திருகோணமலை – கிண்ணியா
முல்லைத்தீவு – முல்லைத்தீவு வவுனியா – வெங்கல செட்டிகுளம்.
இதேவேளை, பொது பாதுகாப்பு அமைச்சு மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அறிவித்தலின் பிரகாரம், பொதுமக்கள் கீழ்கண்டவாறு ஆன்லைன் முறையின் மூலம் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும்.
0 Comments