Ticker

6/recent/ticker-posts

உடைந்த கண்ணாடி போத்தல் துண்டுகளால் சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் திருப்பம்


முல்லேரியா, ஹல்பராவ பிரதேசத்தில் ஐந்து வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபா் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சிறுவன் தங்கியிருந்த இடத்தில் புல் வெட்டும் தொழிலாளியாக பணிபுரிந்த கொட்டாவை பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய ஒருவரே நேற்று(09) முல்லேரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தாா்.

கைது செய்யப்பட்ட 51 வயதுடைய நபர், குழந்தையின் மரணத்திற்கு காரணமானதை ஒப்புக்கொண்டுள்ளார்.

இயந்திரம் மூலம் புல் அறுத்துக்கொண்டிருந்த வேளையில் தற்செயலாக கழன்ற இயந்திர பிளேட் குழந்தையை தாக்கியதாக அந்த நபர் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் தாக்கத்தினால் குழந்தை கீழே விழுந்து காயம் காரணமாக உயிரிழந்துள்ளதாக சந்தேகநபர் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக உடைந்த கண்ணாடி மீது விழுந்ததில் ஏற்பட்ட காயங்களால் குழந்தை இறந்தது போல் அச்சத்தின் காரணமாக காட்சியை அமைத்ததாக அவர் தெரிவித்தார்.

நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் பின்னர் குறித்த நபர் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனது தாத்தா பாட்டியுடன் வசிக்கும் குழந்தை, தனது தாத்தா பராமரிப்பாளராக இருந்த கட்டுமான தளத்தில் பணிபுரியும் சந்தேக நபருடன் நேரத்தை செலவிட விரும்புவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தன்று தாத்தா வேறொரு பயணத்தை மேற்கொள்ளவிருந்ததால், அண்டை வீட்டிற்கு பதிலாக சந்தேக நபருடன் தங்குமாறு குழந்தை கோரிக்கை விடுத்துள்ளது.

நேற்று வியாழக்கிழமை மாலை ஹல்பராவ பகுதியில் உள்ள கட்டுமானப் பகுதியில் இருந்து வெட்டுக் காயங்களுடன் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது.

பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கமான 119 ஊடாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து முல்லேரிய பொலிஸார் சடலத்தை கண்டெடுத்துள்ளனர், தற்போது சந்தேகநபராலேயே செய்யப்பட்டது என கண்டறியப்பட்டுள்ளது

உயிரிழந்தவர் ஹல்பராவ, மாலம்பே பகுதியைச் சேர்ந்த 5 வயதுடைய சிறுவர்.

பெற்றோர் பிரிந்து தாய் வெளிநாட்டில் தொழில் செய்து வருவதால், குழந்தை தாத்தா பாட்டியின் பாதுகாப்பில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமும் செய்திகளுடன் இணைந்து கொள்வதற்கு👉 

https://chat.whatsapp.com/KuMjVS9PjwsJTd10BMK96T

Post a Comment

0 Comments