இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்திலுள்ள கிராமமொன்றில் நேற்று 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் பெண்ணொருவரும் அடங்கியுள்ளார்,

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே3 ஆம் திகதி முதல் நடந்த பாரிய மோதல்களில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

அம்மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனர். இக்கோரிக்கைக்கு குகி-நாகா பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனால் இரு சமூகத்தினர் இடையே வன்முறைகள் மூண்டன. இவ்வன்முறைகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியானதுடன், ஏராளமான வீடுகள், வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. சுமார் 40 ஆயிரம் பேர் தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அங்கு 4 நாட்கள் சென்று ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 6 வழக்கு சி.பி.ஐ. விசாரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழுவால் அமைக்கப்பட்டது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்களும் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில். துலைநகர் இம்பாலுக்கு அருகிலுள்ள கமேன்லோக் கிராமத்தில் நேற்று புகுந்த ஆயுதபாணிகள் 9 பேரை சுட்டுககொன்றுள்ளனர் என மணிப்பூர் மாநில அரசின் தகவல்தொடர்பு அதிகாரி ஹெய்ஸ்னம் பாலகிருஷ்ணா தெரிவித்துள்ளார். 

இச்சம்பவத்தில் காயமடைந்த மேலும் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவ்ர தெரிவித்தார்.

தினமும் செய்திகளுடன் இணைந்து கொள்வதற்கு👉 

https://chat.whatsapp.com/KGLkRIkHz4A47YytsKqt9F