புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு 10 சதவீத அபராதம் விதித்த சுங்கத் திணைக்களம், பிரான்ஸ் பிரஜைக்கு 100 சதவீத அபராதம் விதித்தமை குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.

8.5 கோடி ரூபாய் பெறுமதியான தங்கக் கட்டிகள் மற்றும் நகைகளுடன் பிரான்ஸ் பிரஜை ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக இலங்கை சுங்கப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

4 கிலோ கிராம் 611 கிராம் தங்கத்துடன், பாரிஸில் இருந்து வருகை தந்த குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக சுங்கப் பேச்சாளர் தெரிவித்தார். 35 வயதுடைய இந்த பிரான்ஸ் பிரஜை இதற்கு முன்னரும் பல தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த நிலையில், இம்முறை 24 மணித்தியாலங்களுக்கு மாத்திரம் இலங்கைக்கு வருவதைக் கருத்தில் கொண்டு அவரது பயணப் பொதிகளை பரிசோதித்த போதே தங்கம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பிரான்சின் பாரிஸில் இருந்து புறப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL- 501 மூலம்சனிக்கிழமையன்று கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தபோதே அவரின் உடமைகள்ப ரிசோதிக்கப்பட்டன.

இந்தப் பிரான்ஸ் நாட்டவர் தண்டப்பணத்தை செலுத்த தவறிய நிலையில், சுங்க அதிகாரிகளால் நீர்கொழும்பு பதில் நீதவான் இந்திக டி சில்வா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரை8ஆம் திகதி வரைவிளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், 8 கோடி ரூபாய் பெறுமதியான பெறுமதியானதங்கத்தை சட்டவிரோதமானமுறையில் கொண்டு வந்தபோது, அதில் 10 சதவீதத்தை அதாவது 75 இலட்சம் ரூபாயைஅபராதமாகசெலுத்துமாறு சுங்க அதிகாரிகள்உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், பிரான்ஸ் பிரஜைக்கு 7 கோடி ரூபாய்
அபராதம் விதித்தமை குறித்து சமூக வலை தளங்கள்மன்றும் ஊடக செய்திகள் மூலம் சர்ச்சைகள் எழுந்துள்ளதாக தெரியவருகிறது.