07.05.2023 அன்று காலை 08:15 மணியளவில் கெலிஓயவிற்கு வேலைக்குச் செல்வதற்காக வீட்டிலிருந்து சென்ற சகோதரி முனவ்வரா ஜின்னா அவர்களை கடந்த 6 நாட்களாக காணவில்லை என உறவினர்கள் , போலீசார் தேடி வந்த நிலையில் அவர் காட்டுக்குள் கொலை செய்ய்யபட்டு புதைக்கபட்ட நிலையில் ஜனாஸாவாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சகோதரி பழைய எல்பிட்டியை சேர்ந்தவர். (பழைய எல்பிட்டி - வெலிகல்ல, கண்டி மாவட்டம்)
இந்த யுவதி, கெலிஓயா நகரிலுள்ள பாமசியில் பணியாற்றுக்கின்றார் என யுவதியின் சகோதரர் மொஹமட் இம்ரான் தெரிவித்தார்.
பணியாற்றும் இடத்துக்குச் செல்வதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை (07) வீட்டிலிருந்து புறப்பட்டு, பஸ்ஸூக்காக மட்டும் தன்னிடம் 100 ரூபாயை வாங்கிச் சென்றார் என்று அவரின் சகோதரர் தெரிவித்துள்ள நிலையில் அவர் எல்பிட்டியவில் வைத்து காட்டுக்குள் இழுத்து செல்லப்ட்ட்டு கொலை செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் போதைக்கு அடிமையான இளைஞன் ஒருவன் பொலிசில் சரணடைந்துள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது.
0 Comments