Ticker

6/recent/ticker-posts

காவத்தையில் இருந்து தன்னை வேனில் கடத்தி வந்தததாக பொலிஸாரிடம் நாடகமாடிய சிறுவன் ; மட்டக்களப்பில் சம்பவம்


காவத்தையிலிருந்து இனந்தெரியாதவர்கள் தன்னை வேன் ஒன்றில் கடத்தி வந்ததாக பொலிஸாரிடம் பொய் கூறிய சிறுவனை புதன்கிழமை கைதுசெய்துள்ளதாக மட்டுதலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

காவத்தையில் தாய் ஒருவர் 17 வயதுடைய தனது மகனை ஏரிஎம் இயந்திரத்தில் பணத்தை எடுத்துவருமாறு அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், பணத்தை எடுத்து தொலைத்துவிட்ட சிறுவன் வீடு செல்ல பயந்து அங்கிருந்து மட்டக்களப்பிற்கு சென்றுள்ளான்.

அங்கு காவத்தையில் இருந்து வேன் ஒன்றில் கடத்திவரப்பட்ட நிலையில் தான் வேனில் இருந்து தப்பி ஓடிவந்ததாக பொய்யை கூறி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளான்.

இதனையடுத்து உடனடியாக செயற்பட்ட மட்டு. பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயந்த பண்டார காவத்தை பொலிஸ் நிலையத்திற்கு சிறுவனின் புகைப்படத்தை அனுப்பி அவன் தொடர்பாக விசாரித்தார். 

இதன்போது, காவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறித்த சிறுவன் கடத்தப்பட்டதாக எந்தவித முறைப்பாடும் இல்லை எனவும், இவன் இவ்வாறு 3 தடவை வீட்டில் இருந்து பணத்தை எடுத்து தப்பி ஓடியவர் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து சிறுவனை கைதுசெய்த பொலிஸார் சிறுவனின் குடும்பத்தவர்களை வரவழைத்து சிறுவனை எச்சரித்து அவர்களிடம் இன்று வியாழக்கிழமை ஒப்படைத்துள்ளனர்.

Post a Comment

0 Comments