Ticker

6/recent/ticker-posts

நீண்ட விடுமுறை என்பதால் பெருந்தொகையானவர்கள் நுவரெலியாவில்... ஜும்மா தொழ பள்ளியில் இடப்பற்றாக்குறை ஏற்படும் அளவுக்கு பயணிகள் வருகை என தெரிவிப்பு.


இன்று (05) வெசாக் பௌர்ணமி தினத்துடன் இணைந்த நீண்ட வார விடுமுறை என்பதால் 8000 இற்கும் அதிகமான முஸ்லிம் தொழுகையாளிகள் (ஆண்கள்) வெள்ளிக்கிழமை நுவரெலியா பிரதான பள்ளிவாசலுக்கு ஜும்மா தொழுகைக்காக வந்ததாக நுவரெலிய மஸ்ஜிதுல் கபீர் ஜும்மா பள்ளி பரிபாலன சபை தெரிவித்துள்ளது. 

பள்ளிவாசலுக்கு சொந்தமான கட்டிடத்தில் 6000க்கும் மேற்பட்டோர் தொழுகை நடத்தலாம் என்றும், ஆனால் வந்த பெருந்திரளான கூட்டத்தால் நுவரெலியா பழைய கண்டி வீதியில் வாகனங்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டதாகவும், நுவரெலியா போக்குவரத்து பொலிஸாரின் ஆதரவுடன், வீதியில் தொழுகை நடத்த அனுமதிக்கப்பட்டது.


2019 ஆம் ஆண்டுக்கு பிறகு நுவரெலியாவிற்கு இவ்வளவு பெரிய கூட்டம் வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.


பெருந்தொகையானவர்கள் வீதியில் தொழுகை நடத்தியாதால் ஒரு மணித்தியாலம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் பழைய கண்டி வீதிக்கு பதிலாக பக்க வீதிகளில் வாகனங்களை செலுத்த வேண்டியுள்ளதாக நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

தினமும் செய்திகளுடன் இணைந்து கொள்வதற்கு👉 

https://chat.whatsapp.com/B7eV2rPN1dd6EKYwiqguf5

Post a Comment

0 Comments