Ticker

6/recent/ticker-posts

இன்று நள்ளிரவு முதல் சீமெந்து விலை குறைப்பு!!*


நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சீமெந்து விலையை குறைக்கதீர்மானிக்கப்பட்டுள்ளதாக மொத்த சீமெந்து விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, 50 கிலோ கிராம் எடைக்கொண்ட சீமெந்து மூடை ஒன்றின் விலை 150 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.

தற்போது, சீமெந்து மூடை ஒன்று 2,750 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்ற நிலையில், புதிய விலை திருத்தத்துக்கு அமைய 2,600 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது

இதேவேளை, வீட்டுக்கடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், சீமெந்துக்கான கேள்வி தற்போது50 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக சீமெந்து உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் காரணமாக, நாட்டின் முன்னணி சீமெந்து உற்பத்தி நிறுவனம் ஒன்று, தமது நான்குதொழிற்சாலைகளில், மூன்றை மூடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமும் செய்திகளுடன் இணைந்து கொள்வதற்கு👉 

https://chat.whatsapp.com/KuMjVS9PjwsJTd10BMK96T


Post a Comment

0 Comments