இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மோதியதில் இளைஞரொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்த சம்பவம் சனிக்கிழமை (20) காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி சென்றுகொண்டிருந்த ஏறாவூர் டிப்போவுக்கு சொந்தமான பேருந்தொன்று கல்முனையில் பயணிகளை இறக்கிவிட்டு, மீண்டும் ஏறாவூர் டிப்போவுக்குத் திரும்பிச் சென்றுகொண்டிருந்தது.
அப்போது கிரான்குளம் விஷ்ணு கோயிலுக்கு முன்னால் தூங்கிக்கொண்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் 23 வயது இளைஞரை மோதிவிட்டுச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.
இந்நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காத்தான்குடி பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் பேருந்தின் சாரதியை கைதுசெய்துள்ளனர்.
மேலும், இளைஞரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தினமும் செய்திகளுடன் இணைந்து கொள்வதற்கு👉
0 Comments