கடந்த திங்கட்கிழமை (22) ஆசிரியை பஹ்மிதா ரமீஸ் தரப்பிற்கும் ஷண்முகா இந்து மகளிர் கல்லூரி அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜன் தரப்பிற்குமிடையில் இணக்கப்பாட்டுக்கு வந்ததை அடுத்து வழக்குகள் முடிவுறுத்தப்பட்ட நிலையில் உடன்பட்ட நிபந்தனைகளில் ஒன்றான ஆசிரியை பஹ்மிதா றமீஸின் இடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தர உயர்வு, சம்பள உயர்வுக்கான ஆவணங்களை உடனே கையெழுத்திடுவதாக அதிபர் தரப்பு ஏற்றிருந்தது.
வழக்கின் நிபந்தனைகளில் ஒன்றை நிறைவேற்றும் முகமாக கடந்த செவ்வாய்க்கிழமை (23) குரல்கள் இயக்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி ஹஸ்ஸான் றுஸ்தி மற்றும் தவிசாளர் சட்டமாணி றாஸி முஹம்மத் ஆகியோருடன் திரு. ஷண்முஹா இந்து மகளிர் கல்லூரிக்கு ஆசிரியை பஹ்மிதா றமீஸ் ஹபாயா ஆடை அணிந்து சென்று தனது ஆவணங்களை அதிபரினால் கையெழுத்திடப்பட்டு பெற்றுகொண்டார்
எந்த பாடசாலைக் கதவுகளினூடாக ஆசிரியை பஹ்மிதா அவர்கள் உரிமை மறுக்கப்பட்ட நிலையில் வெளியேறினாரோ, அதே கதவினூடாக ஹபாயா அணிந்த வண்ணம் நுழைந்து எந்த அதிபர் அலுவலகத்தில் இருந்து கடமையேற்க விடாமல் விரட்டப்பட்டாரோ அதே பாடசாலை அலுவலகத்தில் அதிபர் லிங்கேஸ்வரி முன்னால் ஹபாயாவோடு கதிரையில் அமர்ந்து கௌரவமாக தனது ஆவணங்களைப் பெற்றுக் கொண்டார்.
தினமும் செய்திகளுடன் இணைந்து கொள்வதற்கு👉
0 Comments