வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், குறித்த பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தை அளவிடும் வெப்பச் சுட்டெண் அவதானமாக இருக்க வேண்டிய மட்டத்தில் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதேவேளை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் வெப்ப சுட்டெண் உயர் மட்டத்தில் காணப்படுவதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


குறித்த பகுதிகளில் வசிப்பவர்கள் நீரேற்றத்துடன் இருக்குமாறும் முடிந்தவரை நிழலில் இருக்குமாறும் அறிவுறுத்தப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதற்கிடையில், வானிலை திணைக்களம் மேலும் அந்த பகுதிகளில் வசிப்பவர்கள் வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுமாறும், வெளிப்புற நடவடிக்கைகளை கட்டுப்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளது.

தினமும் செய்திகளுடன் இணைந்து கொள்வதற்கு👉 

https://chat.whatsapp.com/KuMjVS9PjwsJTd10BMK96T